Friday, May 21, 2010

தெரிந்த புராணம், தெரியாத கதை – சிவனுக்கு 2 மனைவியா?

மர்ம தேசம் என்று பெயர் வைத்து விட்டு சிரிதும் மர்மத்தை கலையமால் இருந்தால் எப்படி? ஆகையால், ‘தெரிந்த புராணம், தெரியாத கதை’ என்ற பகுதியை ஆரம்பிக்கிறேன். சில வருடங்களுக்கு முன் இந்த பெயரில் ஒரு கதை தொகுப்பு நூலை படித்தேன். என மனதை உருத்திக் கொண்டிருந்த சில கேள்விகளுக்கு அந்த நூல் பதில் தந்தது. அதில் ஞாபகம் இருக்கும் சில கதைகளையும், துங்கீசம் மாத இதழில் வந்த சில கதைகளின் சுருக்கத்தையும் எனக்கு புரிந்த அளவிற்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.




சிவனுக்கு இரண்டு மனைவியா?

இரண்டு மனைவி இருக்கும் கடவுள் யார் என்று கேட்டால், சிவன் முருகன், பெருமாள் என்று சட்டென பதில் கூறிவிடுவார்கள். முருகன், திருமாள் கதையை பிறகு பார்ப்போம். சிவனுக்கு வருவோம். சிவனின் மனைவி இருவர். அதவாது, உமா தெவியாரும், முடி மீது தாங்கும் கங்கா மதாவும் என்று பரவலாக கூறப்படுகிறது. உலகத்தை காக்கும் கடவுளுக்கு இரண்டு மனைவி என்று கேட்டால் நன்றாகவா இருக்கிறது? சிவனின் மனைவி உமையாள் மட்டுமே. அப்படியனால் சிவன் தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? கங்கை கொண்டானின் திருமுடியில் கங்கை வந்த கதையை பார்ப்போம்.

அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டிருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை எல்லாம் ஒரு உபாதை கூரும்படி கேட்டான். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.

பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள்.

“தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கஙகையில் கரைக்க வெண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்.”

”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆக, என் வலிமையை தாஙக கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான். என் வலிமையை தாங்க முடியும்” என்று கூரி மறைந்தாள்.

பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவபெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார். சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள்.



இந்த சம்பவத்தை முன்னிட்டு கங்கைக்கு பகீரதை என்ற பெயரும் வழங்குவதுண்டு. இனியாவது சிவனுக்கு ஒரே மனைவி என்று உரைப்போம்.

2 comments:

  1. திருச்சிற்றம்பலம்
    மனைவி என்பதற்கு மனையில் துயில்பவள், இருப்பவள், வசிப்பவள் என்று கூட அர்த்தம் கொள்ளலாம் தானே...
    ஆக, கங்கா தேவி எம்பெருமான், தென்னாடுடையவனின் கரு சடைமுடியை தன் மனையாக, அதாவது இல்லறமாக கருதி வாழ்கின்றாள்; எனவே அவளை எம்பெருமான் திருச்சிற்றம்பலநாதனின் மனையாள், மனைவி என்று கூறுவது வழக்கமாக இருக்கலாம் அல்லவா?
    கதை பொய் இல்லை, ஆனால் நம் தமிழின் இனிமை இங்கு காணமுடிகிறது....

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி அய்யா...
    வாழ்க தமிழ், வளர்க தமிழினம்...

    ReplyDelete