Tuesday, December 28, 2010

விதியின் திருவிளையாடல்


வாழனும்...

நூறாண்டு வாழனும்,

அவா நெஞ்செல்லாம் சூழ்ந்திருக்க...

கனா எண்ணமெல்லாம் நிறைந்திருக்க...


விதியின் கரவிரலோ ஒரு சைபரை தன்பால் அள்ளி

தன் கழுத்தில் மலர் மாலையாகவும்

என் மெய் முன்னே மலர் வளையமாகவும்


விதி தன் திருவிளையாடலை காட்டி

வைத்த்து முத்தாய்ப்பு என் நூற்றாண்டு வாழ்வுக்கு...

தோல்வி



தோல்விகளே இல்லாமல் போனால்

வெற்றிக்கு ஏது மதிப்பு?

பல தோல்விப் படிகளே

வெற்றியின் உறத்க்கு அடித்தளம்!

கலங்காதிரு...

அயராதிரு...

விழுந்திடாதிரு...

வெற்றிபாதையில்

உன் கால் தடங்கள்

பதிந்து கொண்டிருக்கின்றது...