Friday, May 21, 2010

தெரிந்த புராணம், தெரியாத கதை – சிவனுக்கு 2 மனைவியா?

மர்ம தேசம் என்று பெயர் வைத்து விட்டு சிரிதும் மர்மத்தை கலையமால் இருந்தால் எப்படி? ஆகையால், ‘தெரிந்த புராணம், தெரியாத கதை’ என்ற பகுதியை ஆரம்பிக்கிறேன். சில வருடங்களுக்கு முன் இந்த பெயரில் ஒரு கதை தொகுப்பு நூலை படித்தேன். என மனதை உருத்திக் கொண்டிருந்த சில கேள்விகளுக்கு அந்த நூல் பதில் தந்தது. அதில் ஞாபகம் இருக்கும் சில கதைகளையும், துங்கீசம் மாத இதழில் வந்த சில கதைகளின் சுருக்கத்தையும் எனக்கு புரிந்த அளவிற்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.




சிவனுக்கு இரண்டு மனைவியா?

இரண்டு மனைவி இருக்கும் கடவுள் யார் என்று கேட்டால், சிவன் முருகன், பெருமாள் என்று சட்டென பதில் கூறிவிடுவார்கள். முருகன், திருமாள் கதையை பிறகு பார்ப்போம். சிவனுக்கு வருவோம். சிவனின் மனைவி இருவர். அதவாது, உமா தெவியாரும், முடி மீது தாங்கும் கங்கா மதாவும் என்று பரவலாக கூறப்படுகிறது. உலகத்தை காக்கும் கடவுளுக்கு இரண்டு மனைவி என்று கேட்டால் நன்றாகவா இருக்கிறது? சிவனின் மனைவி உமையாள் மட்டுமே. அப்படியனால் சிவன் தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? கங்கை கொண்டானின் திருமுடியில் கங்கை வந்த கதையை பார்ப்போம்.

அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டிருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை எல்லாம் ஒரு உபாதை கூரும்படி கேட்டான். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.

பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள்.

“தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கஙகையில் கரைக்க வெண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்.”

”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆக, என் வலிமையை தாஙக கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான். என் வலிமையை தாங்க முடியும்” என்று கூரி மறைந்தாள்.

பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவபெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார். சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள்.



இந்த சம்பவத்தை முன்னிட்டு கங்கைக்கு பகீரதை என்ற பெயரும் வழங்குவதுண்டு. இனியாவது சிவனுக்கு ஒரே மனைவி என்று உரைப்போம்.

கள்வன்

முதல் சந்திப்பில் காதல் மலர்ந்த்து
இனி வார்தைகள் இதமாய் இருந்த்து
கண்களால் காண மனதிற்கு பிடித்திருந்தது
நீதானா அவன் என்று எனக்கு தோண்றியது

உனை நம்பினேன்
காரில் ஏரினேன்
உனை மகிழ்வித்தேன்
எனை உனக்கு தந்தேன்

பாசத்தை நீ பொழிந்தாய்
என் அன்பினை நீயும் எற்றாய்
மார்பினை படுக்கையாகிக்கொண்டாய்
மெய் மறந்து தூங்கவும் செய்தாய்

ஒரு உன்னுடன் பழக்கம்
உன் மேல் ஏற்பட்டது விருப்பம்
என் நெஞ்சில் இல்லை கள்ளம்
எதிர்பார்தேன் உன் அன்பு உள்ளம்

மறந்தேன் என் கடமைகளை
மதித்தேன் உன் உணர்வுகளை
மிதித்தாய் என் கனவுகளை
விரும்பினாய் என் உடமைகளை

நான் உன் இதயத்தை களவாட நினைத்தேனே
நீ உன் உடமைகளை களவாடி விட்டாயே
திக்கின்றி விழிக்க என்னை விட்டு சென்றாயே
கள்ளா! உனை என்றும் என் வாழ்வில் மறவேனே...

செவ்வண்ணவொளி ஏரியா

செவ்வண்ணவொளிக்கீழ்
பலரினுயிரனுக்கள்
பிறந்திறந்துலர்ந்த
மஞ்சத்தின் மீதினிலே

கவர்ச்சிக்கிலக்கணமாய்
மென்மையேயுருவகமாய்
அணைத்துருக
மெய்யிலே கலந்துருக



ராவெல்லாமுரக்கமிழந்து
பலரகமாய் பலவிதமாய்
வருவோரிச்சையை வாடிக்கையாய்
காமப்பலிபீடமாய் ஏற்று

செல்வமயம் சூழ்ந்திருக்க
உறவோர்களெல்லாம் தலை முழுகிட
வலிப் பொருத்தின்பமளித்து
சுகமே நரகமாயிட

சாலையோர விளக்குப் போல
வலைவீசி வாடிக்கையாளரை
கவர்ந்திழுக்க நிற்கிறாளவன்
அரவான் மனைவியாம் அரவாணி...

Thursday, May 20, 2010

என் காதல் அனுபவங்கள் (பாகம் 2)


படிவம் ஒன்றில், ஒரு மாணவி என் மீது இடிக்கும் அளவிற்கு வந்து விலகி சென்றாள். அவளை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே நடந்தேன். நான் அண்ணார்ந்து பார்க்கும் அளவு உயரம் அவளுக்கு. ஆனாலும் மனதிர்க்குள் பட்டாம் பூச்சிகள் சிரகடித்து பறந்த்தன. பொன்மகள் என் மணமகள் ஆவாளா? நாங்கள் காதல் வானில் பறப்போமா? அவளை காண அவள் வகுப்பின் வழியே காரணஙல் தேடு நடந்து செல்வேன். எனக்கு தெரிந்தவரின் மகள் என்பதால் என் அப்பா அங்கு செல்லும் போதெல்லாம் நானும் வீட்டிர்கு சென்று அவளை கண்ணால் வலை வீசி தேடுவேன். அப்படி இப்படியென்று மறு வருடம் என் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றலாகி வந்து சேர்ந்தோம்.

படிவம் மூன்றை முடித்து விட்டு நாங்கள் பள்ளி மாணவர்கள் எல்லாம் தலை நகருக்கு ஒரு சுற்றுலா மேற்கொண்டோம். அது தீபாவளி காலம். ஒரு தீபாவளி சந்தையில் கண்டேன் அந்த மங்கையை. அவள் வைத்திருந்த கடையில் எனக்கு பிடித்த உலக அழகியின் படத்தை வாங்கி கொண்டிருக்கும் போது அறிமுகமாகி கொண்டோம். தொலைபேசி எண்கள் இடம் மாறின. பின்பு தொலை பேசியில் தொடர்பு தொடர்ந்தது. வயது கோளாறோ என்னவோ, எங்கள் நட்புக்கு காதல் என புது பெயரிட்டோம். ஒவ்வொரு நாளும் பல மனி நேரம் பேசி தீர்த்தோம். ஒரு நாள் பேசவில்லை என்றால் உலகமே இருண்டதாக தோண்றும். கடிதத்திலும் உறவு தொடர்ந்தது. இப்படி உறவாடுகையில் ஒரு நாள், அவளிடம் இருந்து ஒரு கடிதம். ‘I hate U’, ‘don’t call me’, ‘don’t send me letter’, இப்படி கடிதம் முழுவதும் பல வர்ணங்களிலும் பல அளவுகளிலும் எழுதி அனுப்பி இருந்தாள். அதோடு முடிந்த்து அவல் சகாப்தம்.

அதோடு, படிவம் ஆறிற்குச் செல்வோம். அப்போது, சிங்கை மாநகரில் உள்ள என் நன்பன் ஒருவன் சீன காதலி வைத்திருந்தான். சீன காதலி வைத்திருப்பது மிக சௌகரியம் என பலவாறாய் அரிவுரை வழங்கினான். நானும் அதில் மயங்கி ஒருத்தியை தேட ஆரம்பித்தேன். அப்போது என் வகுப்பில் இருந்த ஒரு சீன மாணவி தேவதை போல தெரிந்தாள். வகுப்பில் அவளை பார்த்து கொண்டெ என் நேரம் செலவாகிவிடும். அவள் என்னை விட மிக சிரியதாய், வெலுப்பாய், அழகாய் இருந்தாள். ஆனால், நான் மனம் தளராமல் அவளை நினைத்தே ஒரு வருடம் முடித்து விட்டேன். என் காதலை மனதில் வைத்தே சமாதி கட்டி விட்டேன்.

இந்த காதல் ‘autograph’-ல் இன்னும் சிலர் உள்ளனர். ஆனால் அதனை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியா ஒரு இக்கட்டான சூழ்நிலை எனக்கு. ஆக, இதுத்துடன், என் காதல் அனுபவங்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கிறேன். . .

Tuesday, May 18, 2010

என் காதல் அனுபவங்கள் (பாகம் 1)

அனைவரின் வாழ்க்கையிலும் காதல் ஏதாவது ஓர் உருவத்தில் வந்து செல்கிறது. அது ஓரின காதலாய் இருந்தாலும் சரி, காதல் காதலே. காதலுக்கு கண் இல்லை. ஆகையால்தான் உருவம், வர்ணம், அந்தஸ்து, வயது, பால் என்று எதுவும் அதன் கண்ணில் புலப்படுவதில்லை.

எனக்கு வந்த காதலுக்கும் கண்ணில்லை போலும். சிறுவயதில் வரும் காதல் என்றுமே இனிமையானதே. அதற்காக நான் செய்தவைகளை இன்று எண்ணிப் பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது..

எனக்கு 11 வயது இருக்கும், என் ஆங்கில ஆசிரியர் என் மீது சற்று அதிகமாகவே அன்போடு இருந்தார். அவர் அன்போடு இருந்த போதுகூட எனக்கு ஒரு உணர்வும் பூக்கவில்லை. ஆனால், மறு வருடம் நான் செய்த தவறினால் என் மீதிருந்த அக்கறை சாதரண நிலைக்கு மாற ஆரம்பித்தது. அதோடு அவர் மனம் இன்னொரு மாணவன் மீது படிந்த்து. அப்போது நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே. ஒவ்வொரு நாளும் கட்டில் மேல் குப்புற படுத்து பொறாமைத் தீயால் வெந்து அழுது தீர்ப்பேன். இது காலவோட்டத்தில் மாறிட...

படிவம் ஒன்றில், ஒரு மாணவி என் மீது இடிக்கும் அளவிற்கு வந்து விலகி சென்றாள். அவளை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே நடந்தேன்.

அழகு

தமிழே,
எழில் மிகு தமிழே,

உன் அழகில் மயங்கிய நான்,
இன்று கடல் எழிலில் மயங்கினேன்...

மணல் மலர்களை அலை அலையாய் தூவி,
நீல வண்ண பட்டுடுத்தி மடிப்பு கலைய நளினம் புரிகிறாயே...

கண்மை போன்ற கோட்டினை,
உனக்கும் வானத்திற்கும் உள்ள இடைவெளியனை,
ஒரு கோடாய் காட்டி,
காணும் கண்ணை பறிக்கிறாயே...

வைகுண்ட வாசலாய் அன்றி,
வாசல் திறந்து என்னை அழைக்கிறாயே...

கடலடி உன் சுந்தர சொர்க்க பூமியோ...
கடலே,
தமிழே,
அழகே,
எழிலே...
சதுர் சொற்களும் சமமோ...

தமிழின்பம் கண்டேன்,
கண்ணீர் வடித்தேன்...

இன்று கடலழகை கன்டேண்,
மீண்டும் கண்ணீர் வடித்தேன்...

தமிழின்பத்தில் மூழ்கி உச்சி குளிர்ந்தேன்,
இன்று உன்னுள் மூழ்கி சாந்தி அடைய விரும்புகின்றேன்...

மச்ச கன்னிகளே வாருங்கள்,
எனை அழைத்துச் செல்லுங்கள்,
உங்கள் சொர்கத்தில்
எனை உறுப்பினராய் சேருங்கள்...

தமிழே


தமிழே யார் நீ?
உனக்கும் எனக்கும் உள்ள உறவுதான் என்ன?

கொஞ்சும் தமிழ் கவிதைகளினூடே
எனை தாலாட்டி தாயானாய்....

வள்ளுவனின் கைகோளின் இருவரிகளினூடே
எனை அறிவூட்டி தந்தையானாய்....

இனிய தமிழ் சொற்களினூடே
எனை வாதிட்டு சகோதரனானாய்....

அரும்தமிழ் சங்க்கால பாடல்களினூடே
எனை களியூட்டி தோழியானாய்....

ஔவையாரின் அகர வரிசைகளினூடே
எனை நேர்வழிப்படுத்தி மூதாதையரானாய்....


அருவாய் உருவாய்
அனைத்திலும் சங்கமித்திருக்கிறாயே...

என் மூச்சிலும் பேச்சிலும்
கலந்திருக்கும் தமிழே...

சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி,
உன் தமிழருள் வேண்டி வணங்குகிறேன் தமிழே...

முதல் வணக்கம்


ஆதி அந்தம் இல்லாதவளாம்,

குறள் வரிகளை காதணியாய் கொண்டவளாம்,

சங்க கால பாடல்களை மேலாடையாய் கொண்டவளாம்,

ஐம்பெரும் காப்பியங்களை அணிகளாய் அணிந்தவளாம்...

தமிழ் தாயே உனக்கு கோடி வணக்கங்கள்...