Tuesday, May 18, 2010

அழகு

தமிழே,
எழில் மிகு தமிழே,

உன் அழகில் மயங்கிய நான்,
இன்று கடல் எழிலில் மயங்கினேன்...

மணல் மலர்களை அலை அலையாய் தூவி,
நீல வண்ண பட்டுடுத்தி மடிப்பு கலைய நளினம் புரிகிறாயே...

கண்மை போன்ற கோட்டினை,
உனக்கும் வானத்திற்கும் உள்ள இடைவெளியனை,
ஒரு கோடாய் காட்டி,
காணும் கண்ணை பறிக்கிறாயே...

வைகுண்ட வாசலாய் அன்றி,
வாசல் திறந்து என்னை அழைக்கிறாயே...

கடலடி உன் சுந்தர சொர்க்க பூமியோ...
கடலே,
தமிழே,
அழகே,
எழிலே...
சதுர் சொற்களும் சமமோ...

தமிழின்பம் கண்டேன்,
கண்ணீர் வடித்தேன்...

இன்று கடலழகை கன்டேண்,
மீண்டும் கண்ணீர் வடித்தேன்...

தமிழின்பத்தில் மூழ்கி உச்சி குளிர்ந்தேன்,
இன்று உன்னுள் மூழ்கி சாந்தி அடைய விரும்புகின்றேன்...

மச்ச கன்னிகளே வாருங்கள்,
எனை அழைத்துச் செல்லுங்கள்,
உங்கள் சொர்கத்தில்
எனை உறுப்பினராய் சேருங்கள்...

3 comments:

  1. migagavum arumai anne.....unggal muyatchi toderetum...

    ReplyDelete
  2. tamil thaai alinthu vittalo...
    allathu thanathu pillaigalai maranthu vittaalo....
    endru anaivarum sinthikkum velayil....
    tamil taayin avataaramaai naan ullen...
    aval sevayai naan seiven.....
    endru taai kooriyathu pola ullathu anna....
    nalla muyarchi...vaaltukkal...

    ReplyDelete
  3. நன்றி ஓமானா...

    வதனா, என்னை அதிகமாக புகழாதே மா. எனக்கு முன் பல பேர் பல வலைபதிவுகளை தமிழில் எழுதி இருக்கிறார்கள். மிக அருமையாக எழுதி இருப்பார்கள்.

    ReplyDelete