Friday, June 11, 2010

இளவஞ்சி (சிறுகதை பாகம் 2)

புடவையை சரிப்படுத்திக் கொண்டு நான் வெளிவரும்போது மணி ஏழாகிவிட்டது. அணைவரும் தயாரன நிலையில் கிளம்ப காத்திருந்தனர். நானும் உச்சகட்டமாய் காலையில் வாங்கி வைத்த ரோஜாவையும், மல்லிகையையும் சூட்டிக்கொண்டு திரும்பும்போது, “வாங்கடி போகலாம், ரதம் கிளம்பிட போகுது”, என்றபடியே அறையை பூட்டிக்கொண்டு வந்தாள் வனஜா. நீல வண்ண புடவையில் அவள் தேவதை போல் இருந்தாள்.

எல்லோரும் நடந்து கோவில் வாயிலை அடையும் போது, உற்சவ சிலை ரததிற்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தது. நானும், தோழியரும் நடந்து வருகையிலே பதின்ம வயதினர் கூட்டம் எங்களை விசிலடித்து கேலி செய்தனர். அவர்களின் கேலி பேச்சு எங்களுக்கு ஒன்றும் புதியதல்ல. கோவிலுக்கு வரும் போது பிரச்சனை எதற்க்கு என்று நாங்களும் அவர்களை அதட்டுவதில்லை.

நுழைவாசலில் எங்களை பார்த்ததும், பூசாரி அய்யா “வாங்க மா, ஏன் இவ்வளவு தாமதம்?” என்ற தோரனையில் கண்களாலேயே கடிந்து, தலையாட்டி வரவேற்று திரும்பினார். வெள்ளி தோறும் கொயிலுக்கு வருவதால் அவருக்கு நாங்கள் பழகிவிட்டோம். கோவிலில் எப்போதும் நாங்கள் சந்திப்பவர்கள் எங்களை பார்த்ததும் புன்முருவல் பூத்தனர். வருகை தந்திருந்த பல ஆடவர்களும் எங்களை பார்த்த்தும் முப்பத்திரண்டு பல் தெரிய இழித்தனர்.

தூரத்தில் பதினேழு வயது மதிக்கத்தக்க இறு கன்னிகள் என்னைப் பார்த்ததும் அவர்களுக்குள் பேசி நகைத்துக் கொண்டனர். ஓர் இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை சிகப்பு ஜரிகையிட்ட வெள்ளை பட்டு பாவடையணிந்து அங்கும் இங்கும் குதித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவளின் சுட்டிதனம் பார்ப்ப்வர் மனதை சுண்டி இழுத்தது. அவள் என்னை கவனிக்கும் போது கைகாட்டி அழைத்தேன். தனக்கே உரிய ராஜ பானியில் என்னை நோக்கி அவள் நடந்து வரும் அழகை காண்கையில், அய்யோ, எனக்கு இரண்டு கண்கள் போதவில்லையடா சாமி என்று கூவ தோன்றியது. அருகில் வந்த மழலையை உவகையோடு தூக்கினேன். கொஞ்சினேன். அவளும் என் தோடுகளை தொட்டும், காசுமாலையை தூக்கியும் விளையாடினாள்.

ஒரு முப்பது வயது நிரம்பிய பெண்மணி வேகமாய் என்னை நோக்கி நடந்து வந்தாள். என் கையில் இருந்த குழந்தையை வலுக்கட்டாயமாய் இழுத்து தூக்கி “உன்னை ஒரு இடத்தில் இருக்க சொன்னால், இருக்கமாட்டியா?” என்று குழந்தையின் காலில் அடித்து கடந்து சென்றாள். சிரித்துக் கொண்டிருந்த மழலையின் கண்ணிலோ கண்ணீர். பாவம் அவள், உலகம் அறியாத பிஞ்சு பழம்.

கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்து, என் தோழிகளோடு ரதத்தை பின் தொடர்ந்தேன். பக்த பெருமக்கள் எங்களுக்கு வழிவிட்டு தள்ளியே நடந்தனர். கேளியும், கிண்டலும், சிரிப்பொலியும், நகைப்பும் எங்கள் கூடவே நடந்தன.

ஏதோ ஒரு பழகிய குரல் காதுக்கு எட்டியது. யாருடைய குரல் எட்று தேடுகையில், ஆகா... வதனா, என் தங்கை வதனா. அவள் தோழிகளுடன் சிரித்து பேசி நடந்து கொண்டிருந்தாள். பல வருடங்களுக்கு பிறகு அவளை பார்த்ததில் எனக்கு பேரின்பமாய் இருந்தது.

“டேய் வதனா...!” வாடா போடா என்றே வீட்டில் பேசுவது வழக்கம். சுற்றும் முற்றும் பார்த்து அவள் என்னை அடையாளங்கண்டு கொண்டாள்.

“டேய் இளா, எப்படி டா இருக்கே?”

“என்னை விடு. நீ எப்படி இருக்கே? அம்மாவும், அப்பாவும் வந்திருக்காங்களா?” வதனாவின் முகம் சற்றே வாடியது. சுதாகரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

”அவங்க ரெண்டு பேரும் முன்னாலே போறாங்க, நான் என் தோழிகளோட நடந்துக்கிட்டு இருந்தேன்.”

”எனக்கு அவங்களை பார்க்கனும் போல இருக்கு டா. நான் போய் அவங்கள பார்த்து பேசிட்டு வரேன்.” என்று திரும்புகையில் என் கையை பிடித்தாள் வதனா. “வேண்டாம் டா இளா, அம்மாவும் அப்பாவும் உன் மேல இன்னும் கோபமாவேதான் இருக்காங்க., தயவு செய்து போய் பார்க்காதேடா.”

என் கண்ணில் எகுரி குதிக்க நின்ற கண்ணீரை அடக்கி கொண்டேன். மீண்டும் வதனாவே பேச ஆரம்பித்தாள்.

”இத்தனை வருசமாயும் அவங்களால நடந்தத ஏத்துக்க முடியலடா இளா. நான் உண்மை நிலவரத்தை எடுத்து சொன்னாலும் அதை ஏத்துகிற நிலமையை அவங்க இன்னும் அடையலடா. அவங்கள பொறுத்த வரையில் நீ செத்துட்ட இளா.” என் கன்னம் நனைவதை என்னால் உணர முடிந்தது.

“விடு இளா, நடந்தது நடந்து போச்சு. நீ உன் ஆரோக்கியத்தை பார்த்துக்கோடா. எதுவா இருந்தாலும் எனக்கு தெரிவி. என் செல் நம்பர் எடுத்துக்கோடா. நான் கிளம்புறேண்டா. கண்டிப்பா தொடர்பு கொள்ளு. பார்த்துக்கோடா.”

பதில் கூற இயலாமல் அவள் எண்ணை மட்டும் குறித்துக்கொண்டு, தலையசைத்து வழியனுப்பினேன். என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றேன். சத்தமிட்டு கதறி அழ மனம் ஏங்கியது. எட்டு வருடங்களுக்கு முன்னாள் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் விழித்திரையில் உருண்டோடியது. என் நிலையை, என் எண்ணத்தை நான் வீட்டில் கூறியதும் என் தாயார் கதறி அழுத்தும், என் தந்தை என்னை வஞ்சியதும், நான் என் முடிவில் திண்ணமாயிருந்ததும் என் நினைவில் இருந்து இன்னும் அகலவில்லை. அன்றைய நாள் என் முடிவிலிருந்து சற்று தளர்ந்து இருக்கலாமோ என்று சில நேரங்களில் தோன்றுவதுண்டு. ஆனால், என் தோழிகளின் அரவனைப்பில் அணைத்தையும் மறப்பேன்.

வதனா கடந்து செல்லும் வரை காத்திருந்த நர்மதா என்னை வந்து பற்றி கொண்டாள்.

“கவலைபடாதடி, இதெல்லாம் எதிர்பார்த்தது தானே. நம்ம வாழ்க்கை இப்படிதான்-னு அவன் முடிவு பன்னிட்டான். அத மாத்த நீ யாரு, இல்ல நான் தான் யாரு? போன வாரம் என்ன பெத்தவங்கள் வந்து செஞ்ச கூத்த மறந்துட்டியா? சரி வா, மத்தவங்க எல்லாம் முன்னாடி போயிட்டாங்க. நாமும் போவோம்..”

நர்மதா கூறுவதும் உண்மையே. என்னை மட்டுமா. என் தொழிகளில் பலரும் குடும்பத்தால் தள்ளி வைக்கப்பட்டவர்களே. நாங்களூம் என்ன செய்ய? எங்கள் இயற்க்கை அது. எங்கள் வாழும் உரிமையை கையில் எடுத்தது தவறா? வீடு, சமுதாயம் என்று அனைவரும் புறக்கனித்ததனால் தானே நாங்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டோம்.

மகன் ’திருநங்கை’-ஆக மாற முடிவெடுத்ததும், பெற்றோர்கள் சற்று அமைதியாக கையாண்டாலே போதும். எங்கள் வாழ்வு செழிக்கும். சமுதாயம் எங்களை மனுசியாய் பார்த்தாலே போதும், எங்கள் உத்தியோகம் மாறும். மூன்றாம் பாலாய் எற்க வேண்டாம், வெறுத்து ஒதுக்காமல் அரவணைத்தாலே போதும்.

முற்றும்

5 comments:

  1. unexpected ending...continue ur writng.all the best!

    ReplyDelete
  2. ஆதரவான கருத்துக்கு நன்றி விஜயா... கண்டிப்பாக தொடர்கி்றேன்...

    ReplyDelete
  3. nice anne...tq for giving a character for my name in ur story..its nice...heheheheh

    ReplyDelete
  4. அந்த பாத்திரதில் உன் பெயரை வைக்கனும்-னு தோனுச்சு அதான்...

    ReplyDelete
  5. part 2 amazing..the story is more related to ower frenz...waiting for next part....
    fro vicky fb

    ReplyDelete